மேலும் செய்திகள்
மூதாட்டியை தாக்கிய வாலிபருக்கு வலை
3 minutes ago
திருத்தணி: சாராயம் கடத்திய வாலிபரை கைது செய்த போலீசார், 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் இருந்து, திருத்தணி வழியாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திற்கு சிலர் சாராயம் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார் நேற்று, திருத்தணி அடுத்த பூனிமாங்காடு மிட்டகண்டிகை பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 5 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார், மிட்டகண்டிகையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 22, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
3 minutes ago