உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பீரகுப்பத்தில் வரும் 26ல் மக்கள் தொடர்பு முகாம்

பீரகுப்பத்தில் வரும் 26ல் மக்கள் தொடர்பு முகாம்

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், பீரகுப்பம் ஊராட்சியில், இம்மாதம், 26ம் தேதி, கலெக்டர் பிரதாப் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், துறை அதிகாரிகள் பங்கேற்று, மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.இது குறித்து, திருத்தணி தாசில்தார் மலர்விழி கூறியதாவது:திருத்தணி தாலுகாவில் உள்ள பீரகுப்பம் வருவாய் கிராமத்தில், வரும் 26ம் தேதி, கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளதால், பத்து நாட்களுக்கு மேலாக, வருவாய் கிராம மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.இதுதவிர, கிராம நிர்வாக அலுவலர்கள் சிறப்பு முகாம் அமைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு வருகின்றனர்.எனவே, வரும் 26ம் தேதியும், மக்கள் தொடர்பு முகாமில் பங்கேற்று, மனுக்கள் கொடுத்து, அரசு நலத்திட்ட உதவிகள் பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ