மேலும் செய்திகள்
திருத்தணி அரசு பள்ளியில் பனை விதைகள் நடவு
3 hour(s) ago
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆறு, நெருமாநல்லுார், நெடியம், சாமந்தவாடா, புண்ணியம் உள்ளிட்ட கிராமங்களைக் கடந்து பூண்டி நீர்த்தேக்கத்தை சென்றடைகிறது. இதில், நெடியம் - சொரக்காய்ப்பேட்டை இடையே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலம், 10 ஆண்டுகளில் மூன்று முறை இடிந்து விழுந்துள்ளது. கடந்த 2019ல் இடிந்து விழுந்த பாலம், சீரமைக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, சேதமடைந்த பாலத்தின் தெற்கு பகுதியில், கடந்தாண்டு மண் கொட்டி தற்காலிகமாக சமன் செய்யப்பட்டது. ஆனால், பாலத்தின் மையத்தில் இடிந்து தொங்கிய நிலையில் உள்ள பகுதியை சீரமைக்கவில்லை. தற்போது, மண் கொட்டி சமன் செய்யப்பட்ட பகுதியில் மட்டும் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் மையத்தில் தொங்கிக் கொண்டுள்ள பகுதி, தொடர்ந்து கவனிக்கப்படாமல் உள்ள நிலையில், கொளத்துார் பாறை குவாரியில் இருந்து கருங்கல், ஜல்லி ஏற்றி வரும் கனரக வாகனங்கள், இந்த பாலத்தின் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. பாலத்தின் தெற்கில் மட்டும் மேலோட்டமாக கான்கிரீட் கொண்டு சீரமைத்து விட்டு, மையத்தில் உருக்குலைந்து தொங்கிக் கொண்டுள்ள பாலத்தை சீரமைக்காதது, சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
3 hour(s) ago