உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் மழைநீர் தேக்கம் வீரராகவபுரம் பகுதிவாசிகள் அவதி

சாலையில் மழைநீர் தேக்கம் வீரராகவபுரம் பகுதிவாசிகள் அவதி

திருவள்ளூர், வீரராகவபுரம் 4வது வார்டு சாலையில் மழைநீர் தேங்கியதால், பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.திருவள்ளூர் ஒன்றியம், ஈக்காடு அடுத்த வீரராகவபுரம் கிராமம், 4வது வார்டில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள விநாயகர் கோவில் தெரு முதல் அம்மன் கோவில் வரை சாலை சேதமடைந்துள்ளது. சமீபத்தில் பெய்த தொடர் மழையால், இச்சாலை முழுவதும் மழைநீர் தேங்கி விட்டது. தற்போது, மழை நின்ற நிலையில் சாலையில் தேங்கிய மழைநீர் சகதியாக மாறி துர்நாற்றம் வீசுகிறது.மேலும், இங்குள்ள அங்கன்வாடியைச் சுற்றிலும் சகதியாக இருப்பதால், குழந்தைகளும் சிரமத்துடன் நடந்து செல்கின்றனர். ஏற்கனவே, கடந்த சில நாட்களுக்கு முன் இச்சாலையை சிமென்ட் சாலையாக மாற்ற வேண்டும் என, கிராமவாசிகள் கலெக்டரிடம் மனு அளித்திருந்தனர்.இந்நிலையில், தற்போது மழைநீர் தேங்கி, சகதியாக மாறியதால், பகுதிவாசிகள் மேலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, உடனடியாக இச்சாலையை சிமென்ட் சாலையாக மாற்றி, மழைநீர் வெளியேற கால்வாய் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை