உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாணவர் சேர்க்கை வலியுறுத்தி பேரணி

மாணவர் சேர்க்கை வலியுறுத்தி பேரணி

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டியில், அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி நேற்று பேரணி நடந்தது. கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு தொடக்க பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், 300 பேர் பேரணியில் பங்கேற்றனர். கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் பேரணியை துவக்கி வைத்தார்.பயணியர் மாளிகையில் இருந்து துவங்கிய பேரணி, பஜார் பகுதி வழியாக ரெட்டம்பேடு சந்திப்பு வரை சென்றது. பேரணியில் போது, 'அரசு பள்ளியில் வழங்கப்படும் விலையில்லா பொருட்கள், கல்வியை பயிற்றுவிக்க செயல்படுத்தப்படும் சிறப்பம்சங்கள்' குறித்து கோஷமிட்டும், துண்டு பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை