உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறுமி பலாத்காரம் காமுகனுக்கு வலை

சிறுமி பலாத்காரம் காமுகனுக்கு வலை

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே, 10 வயது சிறுமியை துாக்கிச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கும்மிடிப்பூண்டி அருகே, அரசு உதவிபெறும் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும், 10 வயது சிறுமி, நேற்று மதியம் பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, மர்ம நபர் ஒருவர், அருகே உள்ள மாந்தோப்பிற்கு சிறுமியை துாக்கிச் சென்றார். அங்கு, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பினார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, ஆரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை