ரேஷன் அரிசி பறிமுதல்
பொன்னேரி:பொன்னேரி அருகே 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.பொன்னேரி அடுத்த தத்தமஞ்சி கிராமத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து, பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் தலைமையில் அத்துறையினர் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.அங்குள்ள செடிகள் மறைவில், 14 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 750 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றினர்.