ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
திருத்தணி:திருத்தணி அடுத்த, மத்துார் ரயில்வே கேட் பகுதியில், திருத்தணி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பதிவெண் இல்லாத, 'ஸ்கூட்டி' இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரை சந்தேகத்தின்படி, நிறுத்தி விசாரணை நடத்தினர்.விசாரணையில், ஏ.எம்.பேட்டையைச் சேர்ந்த அஜித்குமார், 22 என்றும், 250 கிலோ தமிழக ரேஷன் அரிசி மூட்டைகளை ஆந்திராவிற்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.அதை தொடர்ந்து போலீசார் வாகனம் மற்றும் அரிசியை பறிமுதல் செய்து, திருவள்ளூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், திருத்தணி போலீசார் அஜித்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.