உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் ரவுணடானா அமைப்பு

திருத்தணியில் ரவுணடானா அமைப்பு

திருத்தணி:திருத்தணி நகரில் இருந்து திருப்பதி - சென்னை மார்க்கம் மற்றும் சோளிங்கர் மார்க்கத்திற்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்நிலையில் சோளிங்கர் மார்க்கம் மற்றும் திருப்பதி, சென்னை மார்க்கத்திற்கு வாகனங்கள் செங்குந்தர் நகர் வாட்டர் டேங்க் பகுதியில் இருந்து பிரிந்து செல்கிறது.அந்த இடத்தில் ரவுண்டானா மற்றும் போலீசார் இல்லாததால் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அடிக்கடி மோதி விபத்துக்குள்ளாகிறது. மேலும் அப்பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது தவிர திருத்தணி பஜாரில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு செல்வதற்கு எவ்வாறு செல்ல வேண்டும் என வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர்.இதையடுத்து திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் வாகன ஓட்டிகள் நலன் கருதியும், விபத்துக்கள், நெரிசல் தவிர்க்கவும் திருப்பதி, சென்னை மார்க்கம், சோளிங்கர் மார்க்கம் பிரியும் இடத்தில் புதியதாக ரவுண்டான அமைத்து அறிவிப்பு பலகையுடன் தனித்தனி சாலை அமைக்கும் பணி 1.60 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டது.தற்போது, 95 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. ரவுண்டானா பணி முடிந்து பயன்பாட்டிற்கு வரும்போது விபத்துக்கள் தவிர்க்கப்படும் என, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை