உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மீட்கப்பட்ட ரூ.55.65 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு

மீட்கப்பட்ட ரூ.55.65 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு

ஆவடி:ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், பங்குச்சந்தை, பகுதி நேர வேலைவாய்ப்பு தொடர்பான 'ஆன்லைன்' மோசடி புகார்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதம், ஆவடி சைபர் கிரைமில் ஆறு புகார்கள் வந்துள்ளன. இது குறித்து விசாரித்த போலீசார், 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.பாதிக்கப்பட்டவர்கள் செலுத்திய வங்கி பரிவர்த்தனைகள் கொண்டு, சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு கடிதம் கொடுத்து, மோசடி நபர்கள் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.அந்தவகையில், கடந்த 25ம் தேதி முதல் ஜூன் 17ம் தேதி வரை, மோசடி நபர்களின் வங்கி கணக்கில் மீட்ட 55.65 லட்சம் ரூபாயை, போலீஸ் கன்வென்சன் சென்டரில் நடந்த நிகழ்ச்சியில், உரியவர்களிடம் கமிஷனர் சங்கர் நேற்று வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ