கும்மிடிப்பூண்டி சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி அமைந்துள்ள ஜி.என்.டி., சாலையோரம் ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தன. அதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், கடந்த நவம்பர் மாதம், 16ம் தேதி, சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தையும் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர். மாற்று இடம் கேட்டு வந்த சாலையோர வியாபாரிகளுக்கு, பேருந்து நிலையம் அருகே இடம் தேர்வு செய்து, கடைகளுக்கு இடம் ஒதுக்கும் பணிகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க, சாலையோரம் சிறிய இடத்தில் கடைகள் வைக்க தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதை மீறி கூடுதலாக இடத்தை ஆக்கிரமிக்கும் கடைகள் தொடர்ந்து கண்காணித்து அகற்றப்பட்டு வருகின்றன.சில தினங்களாக, அதுபோன்ற ஆக்கிரமிப்புகளை, பேரூராட்சி நிர்வாகமும், மாநில நெடுஞ்சாலை துறையினரும் கண்காணித்து அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.