உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பனப்பாக்கம் தார்ச்சாலை பழுது பகுதிவாசிகள் அவதி

பனப்பாக்கம் தார்ச்சாலை பழுது பகுதிவாசிகள் அவதி

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் பனப்பாக்கம் கிராமத்தில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிவாசிகள் அத்தியாவசிய தேவைகளுக்கு, திருத்தணி, சென்னை நகரங்களுக்கு செல்ல கனகம்மாசத்திரம் பேருந்து நிறுத்தத்திற்கு பனப்பாக்கம் - கனகம்மாசத்திரம் தார்ச்சாலை வழியாக சென்று வருகின்றனர்.2 கி. மீ., துாரம்கொண்ட இந்த தார்ச் சாலை கடந்த இரண்டு ஆண்டாக பழுதடைந்து ஆங்காங்கே பெயர்ந்து பல்லாங்குழி சாலையாக மாறி உள்ளதால், வாகன ஓட்டிகள் சென்று வர சிரமப்படுகின்றனர்.எனவே சேதமடைந்த தார்ச்சாலையை சீரமைக்க திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ