உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அங்கன்வாடி மையத்திற்கு கட்டடம் கட்ட கோரிக்கை

அங்கன்வாடி மையத்திற்கு கட்டடம் கட்ட கோரிக்கை

ஊத்துக்கோட்டை:பூண்டி ஒன்றியம், போந்தவாக்கம் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே உள்ளது அங்கன்வாடி மையம். இங்கு, 18 சிறுவர், சிறுமியர் கல்வி கற்கின்றனர். இந்த மையம் கடந்த, 1968ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டடம். கட்டி முடித்து, 50 ஆண்டு கடந்த நிலையில் தற்போது கட்டடம் உறுதிதன்மை இல்லாமல் உள்ளது. இந்த அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் வேண்டும் என இப்பகுதி மக்கள் பலமுறை பூண்டி ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, போந்தவாக்கம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை