மேலும் செய்திகள்
குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
3 minutes ago
சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு பணி துவக்கம்
4 minutes ago
தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
4 minutes ago
இன்று இனிதாக ... (25.12.2025) திருவள்ளூர்
5 minutes ago
கும்மிடிப்பூண்டி: தொழிலாளர்களின் போக்குவரத்து வசதி கருதி, கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகம், மாதர்பாக்கம் இடையே அரசு பேருந்து சேவை இயக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில், கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்கு வந்து செல்கின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் பகுதியில் உள்ள, 20க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு போதிய பேருந்து வசதியின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, பெண் தொழிலாளர்கள் தினசரி பல இன்னல்களை சந்திக்கின்றனர். அதனால், கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் இருந்து, பாத்தப்பாளையம், ஈகுவார்பாளையம் வழியாக மாதர்பாக்கம் வரை, காலை - மாலை நேரங்களில் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 minutes ago
4 minutes ago
4 minutes ago
5 minutes ago