உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெல் கொள்முதல் நிலையம் மீண்டும் திறக்க கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையம் மீண்டும் திறக்க கோரிக்கை

திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில் 27 ஊராட்சிகள் உள்ளன. இங்கு, 2,500 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டு, தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே, திருத்தணி ஒன்றியத்தில் திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை பின்புறத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மட்டுமே செயல்பட்டு வருகிறது.வேலஞ்சேரி மற்றும் கே.ஜி.கண்டிகை ஆகிய இரு இடங்களில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் மழைக்கு பயந்து விவசாயிகள் அவசரம், அவசரமாக நெல் அறுவடை செய்து, தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.எனவே, விவசாயிகளின் நலன் கருதி, இரண்டு நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ