| ADDED : ஜன 02, 2024 11:10 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் வீரராகவபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது புளியங்குண்டா கிராமம். இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் இல்லாததால், பெண்கள் இயற்கை உபாதையை திறந்த வெளியில் கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதனால் பெண்கள், குழந்தைகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் தங்கள் பகுதியில் பொது கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரக்கோரி, பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.எனவே, இப்பகுதியில் வசிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி, ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.