உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கிணற்றில் தவறி விழுந்த இரு புள்ளிமான் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த இரு புள்ளிமான் மீட்பு

திருத்தணி:திருத்தணி தாலுகா தும்பிக்குளம் அருகே காப்புகாடு உள்ளது. இங்கு, புள்ளிமான்கள் அதிகளவில் உள்ளன. தற்போது, வெயில் அதிகரித்துள்ள நிலையில், வனப்பகுதியில் போதிய தண்ணீர் வசதியில்லாததால், தண்ணீர் குடிக்க அருகே உள்ள விவசாய நிலங்களுக்கு வந்து செல்லும்.இந்நிலையில், நேற்று மாலை தண்ணீர் குடிப்பதற்காக தும்பிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் விவசாய நிலத்திற்கு வந்த இரு புள்ளி மான்கள், 30 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது.இதை பார்த்த நிலத்தின் உரிமையாளர், திருத்தணி தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் புள்ளி மான்களை மீட்டனர். பின், வனத்துறையினர் புள்ளி மான்களுக்கு முதலுதவி அளித்து, மீண்டும் வனப்பகுதியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை