உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வெங்கத்துாரில் குவிந்து வரும் குப்பை தொற்று அபாயத்தில் பகுதிவாசிகள்

வெங்கத்துாரில் குவிந்து வரும் குப்பை தொற்று அபாயத்தில் பகுதிவாசிகள்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி. இங்கு, 15 வார்டுகளில் 40,000த்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 1990 - 91ம் ஆண்டு நிலவரப்படி, 7,000 மக்களுக்கு 18 பேர் துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். ஆனால் இன்று 40,000த்துக்கும் மேல் வசிப்பவர்களுக்கு, 21 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். இவர்களோடு துாய்மை பாரத இயக்கத்தைச் சேர்ந்த துாய்மை காவலர்கள் 24 பேர் இணைந்து குப்பை அகற்றும் பணி செய்து வருகின்றனர்.இதனால் குடியிருப்பு பகுதியில் தினமும் சேகரமாகும் 3 டன் குப்பையை அகற்றுவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதால், பல இடங்களில் குப்பை முறையாக அற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால், பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருவதோடு தொற்று நோய் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மணவாளநகர் பகுதியில் சேகரமாகும் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை