சாலை சீரமைப்பு பணி கிடப்பில் திருமழிசை பகுதிவாசிகள் அவதி
திருமழிசை:திருமழிசை பேரூராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ளது 10வது வார்டு. இப்பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்து பரிதாப நிலையில் உள்ளது.இந்நிலையில் இப்பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பரில் 35 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை சீரமைப்பு பணி துவங்கி நடந்து வந்தது.இதில் ஜல்லி கற்கள் பரப்பியதோடு கடந்த ஐந்து மாதங்களாக எவ்வித பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால் குடியிருப்புவாசிகள் நடந்து கூட செல்ல முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.அவரச மருத்துவ தேவைக்கு ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோ வருவதில் கூட சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.