மேலும் செய்திகள்
அரசூர் பழைய காலனியில் மேல்நிலை தொட்டி அமைப்பு
23-Oct-2024
ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அருகே வெங்கல் ஊராட்சியில், 4,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, வெங்கல் - சீத்தஞ்சேரி மாநில நெடுஞ்சாலையில், அம்பேத்கர் தெருவில், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது.இதில் சேகரிக்கப்படும் நீரை கொண்டு அம்பேத்கர் தெரு, கம்பர் தெரு, நேரு பஜார் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும்.மூன்று நாட்களாக மின் மோட்டார் பழுது காரணமாக, நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டு, குடிநீர் வினியோகம் தடைபட்டது.இதனால், இப்பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, வெங்கல் ஊராட்சியில் பழுதடைந்த மோட்டாரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23-Oct-2024