சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் சட்டம் - ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:பள்ளி, கல்லுாரிகளில் போதை தடுப்பு பணி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடைகளின் உரிமம் ரத்து செய்ய வேண்டும்.சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலையோரம் குவிந்துள்ள மணலை அப்புறப்படுத்த வேண்டும். பாரிவாக்கம் - சென்னீர்குப்பம் சாலையினை சீர்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.கூட்டத்தில், திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாசபெருமாள், பொன்னேரி சப் - கலெக்டர் வாஹே சங்கத் பல்வந்த், வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம் - திருவள்ளூர், தீபா - திருத்தணி உட்பட பலர் பங்கேற்றனர்.