சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்
பொன்னேரி, பொன்னேரி அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தில் இருந்து எருபிள்ளைக்குப்பம் வழியாக, வேலுார் செல்லும் சாலை உள்ளது. தற்போது, 3 கி.மீ., சாலை, 2.02 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இச்சாலையில், ரெட்டிப்பாளையத்தில் உள்ள சாலையின் இருபுறமும், 10 - 15 அடி பள்ளம் உள்ளது. பள்ளி வேன்கள், விவசாய நிலங்களுக்கு செல்லும் வாகனங்கள், கிராமங்களுக்கு சென்று வரும் ஷேர் ஆட்டோக்கள், இப்பகுதியை கடக்கும் போது தடுமாற்றம் அடைகின்றன. குறுகலாக உள்ள இப்பகுதியில் வாகனங்கள் எதிரெதிரே வரும் போது, சாலையோர பள்ளத்தில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், சாலையின் இருபுறமும் இரும்பு தடுப்புகளும், அதில் ஒளிரும் விளக்குகளும் பொருத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.