உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பலத்த பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம்

பலத்த பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம்

திருத்தணி:தமிழகத்தில், 'ஹிந்து மதத்தை வலுப்படுத்தும் வகையிலும், விஜயதசமியை ஒட்டி தமிழகம் முழுதும், 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., விழிப்புணர்வு ஊர்வலம், சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நேற்று நடந்தது.இதையொட்டி, திருத்தணி நகராட்சியில், நேற்று மாலை 4:15 மணிக்கு திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையில் இருந்து ஆர்.எஸ்.எஸ்., நகர தலைவர் மருத்துவர் ஸ்ரீகிரண் தலைமையில் பேரணி நடந்தது. இதில், முன்னாள் அரசு தலைமை கொறடா பி.எம்.நரசிம்மன், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் முன்னாள் பேராசிரியர் ரகுராமன், கிருஷ்ணா குழுமத்தின் தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்று கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.பேரணியில், 400க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து முன்னணி மற்றும் பா.ஜ.,வினர் சீருடை அணிந்தும், கையில் கொடிகளை ஏந்தியும் அரக்கோணம் சாலை, ம.பொ.சி.சாலை, அக்கைய்ய நாயுடு சாலை, சித்தூர் சாலை மற்றும் பைபாஸ் சாலை ரவுண்டானா வரை ஊர்வலமாக வந்தனர். பின், மாலை 6:00 மணிக்கு பைபாஸ் பகுதியில் பொது நிகழ்ச்சி கூட்டம் நடந்தது. இதில், ஹிந்து மதம் குறித்து தலைவர்கள் பேசினர். இந்த ஊர்வலத்தில் அசம்பாவிதங்களை தடுக்க, மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநிவாசபெருமாள், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகுமார் ஆகியோர் தலைமையில், 350க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை