உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூச்சி மருந்து குடித்த பெண் பலி ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவு

பூச்சி மருந்து குடித்த பெண் பலி ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவு

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் துளசிராமன், 30; லாரி ஓட்டுநர். இவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் சங்கீதா, 25, என்பவருடன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு குழந்தை இல்லை. கடந்த சில நாட்களாக தம்பதி அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சங்கீதா பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் சங்கீதாவை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். சங்கீதாவிற்கு திருமணம் நடந்து ஐந்து ஆண்டுகளே ஆன நிலையில், ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை