உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சேலை - ஜெயாநகர் சாலை ரூ.22 லட்சத்தில் சீரமைப்பு

சேலை - ஜெயாநகர் சாலை ரூ.22 லட்சத்தில் சீரமைப்பு

திருவள்ளூர்:ஜெயாநகர் - சேலை சாலை, 22 லட்சம் ரூபாய் மதிப்பில், அகலப்படுத்தி, சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ஜெயா நகரில் இருந்து சேலை கிராமத்திற்கு செல்லும் சாலை, குறுகலாகவும், குண்டும் குழியுமாகவும் இருந்தது. சி.வி.நாயுடு சாலையில் இருந்து, ஜெயா நகர் வழியாக, சேலை கிராமத்திற்கு தினமும், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் பயணம் செய்கின்றன.இதில், சி.வி.நாயுடு சாலையில் இருந்து ஜெயா நகர் பிரியும் இடத்தில், சாலை 20 அடியில் குறுகலாக இருந்ததால், தினமும் இந்த சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் இந்த குறுகிய இடத்தை, 80 அடியாக அகலப்படுத்தியது. பின், ஜெயா நகர் வழியாக, சேலை செல்லும் சாலையில், 370 மீட்டர் நீளத்திற்கு அகலப்படுத்தப்பட்ட சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.இந்த சாலை நேற்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. சாலை அகலப்படுத்தப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் குறையும் என, நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை