| ADDED : ஜன 13, 2024 09:36 PM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி தலைமையில் சமத்துவ பொங்கல் நேற்று நடந்தது.விழாவில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், துாய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அலுவலகம் முன்பு பொங்கலிட்டு ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.இதேபோல், மப்பேடு ஊராட்சி அழிஞ்சிவாக்கம் பா.ஜ. விவசாய அணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதில் 50 பெண்கள் பானைகள் வைத்து பொங்கலிட்டனர்.தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.திருத்தணி டி.எஸ்.பி., அலுவலக வளாகத்தில் போலீசார் குடியிருப்பு உள்ளது. இங்கு, 40க்கும் மேற்பட்ட போலீசார் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று போலீஸ் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ்தமிழ்மாறன் தலைமையில் நடந்தது.இதில், பெண் போலீசார் புதுப்பானையில் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து, சூர்யபகவானுக்கு பொங்கல், மஞ்சள், செங்கரும்பு மற்றும் பழங்கள் படைத்து வழிப்பட்டனர். தொடர்ந்து நடந்த உறியடி நிகழ்ச்சியில், டி.எஸ்.பி., உள்பட இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் பங்கேற்று பானை உடைத்தனர்.