உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பள்ளிக்கல்வி துறை ஹாக்கி வித்யோதயா பள்ளி முதலிடம்

 பள்ளிக்கல்வி துறை ஹாக்கி வித்யோதயா பள்ளி முதலிடம்

சென்னை: தமிழக பள்ளிக்கல்வித் துறையின் மாணவியர் ஹாக்கி போட்டியில், 14, 19 வயதுடைய இரு பிரிவிலும், வித்யோ தயா பள்ளி அணிகள் முதலிடங்களை கைப் பற்றின. பள்ளிக்கல்வித் துறையின் சென்னை வருவாய் மாவட்ட ஹாக்கி போட்டி, செயின்ட் ஜார்ஜ் பள்ளி சார்பில், அண்ணா சாலையில் உள்ள மதரசா அரசு பள்ளியில் நடந்தது. இதில், 23 மண்டலங்களில் வெற்றி பெற்ற அணிகள் பங்கேற்றன. மாணவியர் ஹாக்கிக்கான அனைத்து போட்டிகள் முடிவில், 14 வயது பிரிவில், நுங்கம்பாக்கம் வித்யோதயா பள்ளி முதலிடம் பிடித்தது. ராயப்பேட்டை சேக்ரட் ஹார்ட் பள்ளி இரண்டாமிடத்தையும், சோழிங்கநல்லுார் சென்னை மாடல் பள்ளி, சின்னசேக்காடு அரசு பள்ளி மூன்று மற்றும் நான்காம் இடங்களை பிடித்தன. அதேபோல், 17 வயதில் ஐ.சி.எப்., பள்ளி, சேக்ரட் ஹார்ட், முருக தனுஷ்கோடி, செயின்ட் ஆன்ஸ் ஆகிய பள்ளிகள், முறையே முதல் நான்கு இடங்களை கைப்பற்றின. அடுத்து 19 வயதில் வித்யோதயா பள்ளி முதலிடத்தையும், தண்டையார்பேட்டை முருக தனுஷ்கோடி இரண்டாமிடத்தையும், செயின்ட் உர்சுலா பள்ளி மூன்றாம் இடத்தையும், லேடி ராணி மெய்யம்மை நான்காம் இடத்தையும் பிடித்தன. மூன்று பிரிவிலும், முதலிடத்தை பிடித்த அணிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை