உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளி மாணவ - மாணவியர் கலை திருவிழாவில் அசத்தல்

பள்ளி மாணவ - மாணவியர் கலை திருவிழாவில் அசத்தல்

திருத்தணி, அரசு பள்ளியில் நடந்த கலை திருவிழாவில், மாணவ - மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்று நடனமாடினர். திருத்தணி ஒன்றியத்தில், 100 தொடக்கப் பள்ளிகள், 36 நடுநிலைப் பள்ளிகள், 10 உயர்நிலைப் பள்ளிகள், ஐந்து மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம் 151 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளி மாணவர்கள் இடையே உள்ள கலை உணர்வை வெளியே கொண்டு வருவதற்கு, கல்வித்துறையின் சார்பில் கலை திருவிழா நடத்தப்படுகிறது. திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில். அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ், ஒன்றிய அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நேற்று துவங்கியது. நேற்று தொடக்க பள்ளி மாணவர்களுக்கும், இன்று ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், நாளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் இடையே போட்டிகள் நடக்கின்றன. இதில், பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம், மாறுவேடம், மெல்லிசை பாடல், பேச்சு போட்டி உட்பட மொத்தம் 31 போட்டிகள் நடக்கின்றன. இந்த, 31 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடிக்கும் மாணவ - மாணவியர், அடுத்த மாதம் நடைபெற உள்ள மாவட்ட அளவில் நடக்கும் கலைத்திருவிழாவில் பங்கேற்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ