உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் கைப்பந்து வீரர்கள் தேர்வு

திருத்தணியில் கைப்பந்து வீரர்கள் தேர்வு

திருத்தணி: மாநில அளவிலான சப் --ஜூனியர் கைப்பந்து விளையாட்டு போட்டிகள் வரும், 27 ம் தேதி வேலுாரில் நடைபெறுகிறது. போட்டியில் திருவள்ளூர் மாவட்டம் சார்பில் மாவட்ட அளவில் சப்-- ஜூனியர் கைப்பந்து போட்டியில் பங்கேற்று ஆண், பெண் வீரர்களுக்கான தேர்வு திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. வீரர்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி மாவட்ட வாலிபால் அசோசியேஷன் செயலர் குப்புசாமி தலைமையில் நடந்தது, இதில், 100க்கும் மேற்பட்ட ஆண், பெண் வீரர்கள் பங்கேற்று விளையாடினர். முடிவில் சிறப்பாக ஆடிய, மாநில அளவிலான சப்- ஜூனியர் விளையாட்டு போட்டிக்கு, தகுதியான ஆண், பெண் என மொத்தம் 24 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ