உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  கழிவுநீர் கால்வாய் சேதம் பகுதி மக்கள் அவதி

 கழிவுநீர் கால்வாய் சேதம் பகுதி மக்கள் அவதி

பள்ளிப்பட்டு: தெருவின் குறுக்கே பாயும் கழிவுநீர் கால்வாயின் மேல்தளம் சேதம் அடைந்துள்ளதால், பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளிப்பட்டு ஒன்றியம், கோணசமுத்திரம் கிராமத்தில், பேருந்து நிலையத்தில் இருந்து சிவன் கோவிலுக்கு செல்லும் சாலையில், கழிவுநீர் கால்வாய் குறுக்கிடுகிறது. இந்த கழிவுநீர் கால்வாய் மீது, கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. உறுதியாக அமைக்கப்படாத இந்த கால்வாயின் மேல்தளம், தற்போது சிதைந்து இடிந்து கிடக்கிறது. இதனால், இந்த வழியாக நடந்து செல்லும் பயணியர் மற்றும் பகுதிமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. பகுதி மக்களின் பாதுகாப்பு கருதி, இந்த கழிவுநீர் கால்வாயின் மேல் தளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை