உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கொலை முயற்சி வழக்கில் கைது செய்யக் கோரி முற்றுகை

கொலை முயற்சி வழக்கில் கைது செய்யக் கோரி முற்றுகை

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தை சேர்ந்த சேகர், 60. பொன்னேரியில், இவரது தம்பி மருமகன் கோகுல் சாகர், 42, வசித்து வருகிறார். குடும்ப பிரச்னையில், இம்மாதம், 14ம் தேதி, சேகரை கத்தியால் குத்தி, கோகுல் சாகர் தலைமறைவானார். படுகாயம் அடைந்த சேகர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கு பதிந்து ஒரு வாரமாகியும், இதுவரை எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை என அவரது உறவினர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில், சேகரின் உறவினர் 15 பேர், நேற்று கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.உடனடியாக கோகுல் சாகரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். விரைவில் கைது செய்யப்படுவார் என போலீசார் உறுதி அளித்தபின் உறவினர் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ