உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விதியை மீறி 15 அடிக்கு மேல் மண் எடுப்பு தலைமை செயலருக்கு சமூக ஆர்வலர்கள் புகார் மனு

விதியை மீறி 15 அடிக்கு மேல் மண் எடுப்பு தலைமை செயலருக்கு சமூக ஆர்வலர்கள் புகார் மனு

திருவள்ளூர்:பட்டரைபெரும்புதுார் ஏரியில் விதியை மீறி 15 அடிக்கு மேல் தோண்டி சவுடு மண் எடுக்கப்படுவதாக, தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதுாரில், நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள ஏரியில் சவுடு மண் எடுக்க, மாவட்ட கனிமவள துறையினர் அனுமதி அளித்துள்ளனர். ஒப்பந்தம் எடுத்தோர், அரசு நிர்ணயித்த, 3 அடிக்கு பதிலாக, 15 அடிக்கு மேல் பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி மண் எடுத்து வருகின்றனர். அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டால், நிலத்தடி நீர் பாதிக்கும். மேலும், விவசாய தேவைக்காக, ஏரியில் நீர் தேங்குவதில் தடை ஏற்படும் என, கடந்த வாரம் கிராம மக்கள் குவாரியை முற்றுகையிட்டனர். இதையடுத்து, மாவட்ட கனிமவள துறையினர், 'அரசு நிர்ணயித்த அளவிற்கு மட்டுமே மண் எடுக்க வேண்டும்' என, எச்சரித்துச் சென்றனர். இருப்பினும், அதிகாரிகள் எச்சரிக்கையை மீறி, தொடர்ந்து அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டு வருகிறது. அப்பகுதி சமூக ஆர்வலர்கள், தலைமைச் செயலர் மற்றும் கனிமவள துறை இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: பட்டரைபெரும்புதுார் ஏரியில், 45 நாட்களில் 2,000 லோடு சவுடு மண் எடுக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை போலி ரசீது வாயிலாக, நாளொன்றுக்கு 1,000 லோடு என, 10,000க்கும் மேற்பட்ட லோடு மண் எடுக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறையை மீறி, 15 அடிக்கு மேல் தோண்டி சவுடு மண் மற்றும் மணல் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். எனவே, நேர்மையான அதிகாரிகளை கொண்டு ஆய்வு நடத்தி, மண் திருட்டில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை