உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சோளிங்கர் பக்தோசித பெருமாள் கொண்டபாளையத்தில் கிரிவலம்

சோளிங்கர் பக்தோசித பெருமாள் கொண்டபாளையத்தில் கிரிவலம்

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பக்தோசித பெருமாள் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கிரிவலம் புறப்பட்டார். நேற்று முன்தினம் பரிவேட்டைக்கு கோபாலபுரம், வீரமங்கலம், நாகபூண்டி, அஸ்வரேவந்தாபுரம் என, எழுந்தருளிய பக்தோசித பெருமாள், நேற்று கொண்டபாளையம் கிராமத்தில் கிரிவலம் எழுந்தருளினார்.இதேபோல், திருவள்ளூர் மாவட்டம், அத்திமாஞ்சேரிபேட்டை நெல்லிக்குன்றம் மலைக்கோவில், பொதட்டூர்பேட்டை ஆறுமுக சுவாமி மலைக்கோவில், வங்கனுார் வியாசேஸ்வரர் மலைக்கோவில் உள்ளிட்ட இடங்களிலும் நேற்று கிரிவலம் உற்சவம் நடந்தது. பொதட்டூர்பேட்டை ஆறுமுக சுவாமி மலைக்கோவிலில், இரவு 7:00 மணியளவில் அகத்தீஸ்வரர், விநாயகர், ஆறுமுக சுவாமி உற்சவ மூர்த்திகள், பரிவேட்டை எழுந்தருளினர். பள்ளிப்பட்டு அடுத்த நெடியம் கஜகிரி செங்கல்வராய சுவாமி மலைக்கோவிலிலும், நேற்று ஏராளமான பக்தர்கள், காணும் பொங்கலை ஒட்டி, சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை