உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாணவ- மாணவியர் உயர்கல்வி பயில சிறப்பு குறைதீர் கூட்டம்

மாணவ- மாணவியர் உயர்கல்வி பயில சிறப்பு குறைதீர் கூட்டம்

திருவள்ளூர்:'' பிளஸ் 2 முடித்த மாணவ- மாணவியர் உயர்கல்வி பயில்வதற்காக, வரும் அக்., வரை 15 நாட்களுக்கு ஒரு முறை சிறப்பு குறைதீர் கூட்டம் நடத்தப்படும்,'' என, கலெக்டர் பிரதாப் தெரிவித்தார்.திருவள்ளூர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தில், நடப்பு 2025-26ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 வகுப்பு பயின்ற மாணவ- மாணவியர்களுக்கு, உயர்கல்வி பயில்வதற்கு ஆலோசனை மற்றும் வாய்ப்புகள் அளிப்பதற்காக, கண்காணிப்பு அறை கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காணிப்பு அறையின் செயல்பாடுகளை, கலெக்டர் பிரதாப் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அவர் கூறியதாவது:கண்காணிப்பு அறையில் உள்ள, 93444 10803, 75500 57547 என்ற தொலைபேசி எண் வாயிலாக, மாணவ- மாணவியர், பெற்றோர் தொடர்பு கொண்டு உயர்கல்வி வழிகாட்டுதல் சார்ந்த ஆலோசனை பெறலாம். 15 நாட்களுக்கு ஒரு முறை மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடத்தப்படும். வரும் அக்., 15 வரை சிறப்பு குறைதீர் கூட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை