உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொங்கல் கோலத்தில் இடம்பிடித்த ஸ்ரீராமர்

பொங்கல் கோலத்தில் இடம்பிடித்த ஸ்ரீராமர்

ஊத்துக்கோட்டை, தமிழர்களின் முக்கிய விழாக்களின் தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படும் பொங்கல் விழா சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் காலையில் எழுந்து அனைவரும் குளித்து முடித்து, புத்தாடை அணிந்து, புதுப்பானையில் பொங்கல்வைப்பர்.பின் பொங்கல், கரும்பு உள்ளிட்டவைகள் வைத்து சூரியனுக்கு படைத்து வழிபடுவர். மேலும், பல்வேறு வண்ணங்களில் கோலம் போடுவது வழக்கம். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், வரும் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வருகிறது.இதை குறிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள ஒரு தெருவில், வீட்டின் முன் பொங்கல் தினத்தன்று போட்ட கோலங்களில், ஸ்ரீராமபிரான் வில்லேந்துவது போன்ற வடிவத்தில் கோலம் போட்டு உள்ளது அனைவரையும் கவர்ந்தது. அவ்வழியே சென்ற சிலர் கோலத்தில் உள்ள ஸ்ரீராமபிரானை பார்த்து கையெடுத்து கும்பிட்டுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்