உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மீன் பிடிக்க சென்ற மாணவர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

மீன் பிடிக்க சென்ற மாணவர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

திருவள்ளூர்:மீன் பிடிக்கச் சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவர், குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் மகன் சாலமோன், 14; திருவள்ளூர் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் விடுமுறையை முன்னிட்டு, சாலமோன் தன் நண்பருடன் அங்குள்ள குளத்தில் மீன் பிடிக்கச் சென்றபோது, கோவில் குளத்தில் சாலமோன் தவறி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, மருத்துவர்களின் பரிசோதனையில், ஏற்கனவே சாலமோன் உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து, திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை