உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளியில் நாய்கள் அச்சத்தில் மாணவர்கள்

பள்ளியில் நாய்கள் அச்சத்தில் மாணவர்கள்

பூனிமாங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், பூனிமாங்காடு கிராமத்தில் அரசினர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், பூனிமாங்காடு, நல்லாட்டூர், கோதண்டராமபுரம், வெங்கடாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.பள்ளிக்கு சுற்றுச்சுவர் மற்றும் நுழைவாயில் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சிலர், பள்ளி வளாகத்தில் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.இதுதவிர, பள்ளி வேலை நாட்களில் மாணவர்கள் வகுப்பறைகள் முன், பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் படுத்து ஓய்வெடுகின்றன. மேலும், மதிய உணவு இடைவேளையின் போது, நாய்கள் மாணவர்கள் சாப்பிடும் உணவுகளை சாப்பிடுவதற்கு சண்டை போடுகிறது.இதனால், மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். ஒரு சில நேரத்தில் மாணவர்களை நாய்கள் கடிக்கும் நிகழ்வும் நடப்பதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.பள்ளி வேலை நாட்களிலும் நாய்கள் படுத்து ஓய்வெடுப்பதை பள்ளி நிர்வாகம் கண்டும், காணாமல் உள்ளது.எனவே, பள்ளி வளாகத்திற்குள் நாய்கள் வருவதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ