| ADDED : நவ 20, 2025 03:43 AM
திருத்தணி: திரு த்தணி பெரியார் நகரில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு தரமற்ற முறையில் இருப்பதாக மாணவர்களின் பெற்றோர், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். நே ற்று கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பஞ்சு மற்றும் திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் ஆகியோர், பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு வழங்கிய மதிய உணவை ஆய்வு செய்தனர். பின், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சத்துணவு ஊழியர் களிடம், 'மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கலெக்டரின் நேர்முக உதவியாளர் எச்சரித்தார்.