உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வேளாண் திட்ட பணி இணை இயக்குனர் ஆய்வு

வேளாண் திட்ட பணி இணை இயக்குனர் ஆய்வு

கும்மிடிப்பூண்டி : தமிழக அரசின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளாண் திட்ட பணிகளை, திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முருகன் ஆய்வு செய்தார்.கண்ணம்பாக்கம் கிராமத்தில், மணிலா விதைப்பண்ணை மற்றும் உலர் களம், எளாவூரில், நுண்ணீர் பாசன திட்டம், பயறு வகை விதை பண்ணைகளை ஆய்வு செய்தார்.மேலக்கழனி ஊராட்சியில், மானியத்தில் வழங்கப்பட்ட சுழல் கலப்பை பயன்பாடுகள் மற்றும் கொசஸ்தலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் நடத்தி வரும் விதை சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தார். கும்மிடிப்பூண்டி வேளாண் உதவி இயக்குனர் ஸ்ரீதேவி, வேளாண் அலுவலர் நவீன்பிரசாத், துணை வேளாண் அலுவலர் கணேசன் உள்ளிட்ட வேளாண் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை