மேலும் செய்திகள்
இன்று இனிதாக (19.02.2025) திருவள்ளூர்
19-Feb-2025
நரசிங்கபுரம்:கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் அடுத்துள்ள நரசிங்கபுரம் கிராமத்தில் மரகத வல்லி சமேத லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் நரசிம்மர், தாயாரை மடி மீது அமர்த்தி, அணைத்த கோலத்தில் ஏழரை அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார்.இங்கு, மாதந்தோறும் பெருமாள் பிறந்த நட்சத்திரமான சுவாதியன்று மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று சுவாதி நட்சத்திரம் என்பதால், காலை 6:00 மணிக்கு கோ பூஜையும், விஸ்வரூப தரிசனமும், காலை 9:00 மணிக்கு திருமஞ்சனமும், காலை 10:00 மணிக்கு யாக பூஜையும் நடந்தது.இதில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று நெய் தீபம் ஏற்றி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
19-Feb-2025