மேலும் செய்திகள்
பட்டாக்கத்தியால் கேக் வெட்டி இன்ஸ்டாவில் பதிவு: 3 பேர் கைது
22 hour(s) ago
திருத்தணி அரசு பள்ளியில் பனை விதைகள் நடவு
22 hour(s) ago
கனகம்மாசத்திரம்:திருத்தணி அடுத்த மத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன், 50; அம்பத்துார் டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காலை டி.வி.எஸ்., ஜூபிட்டர் இருசக்கர வாகனத்தில் திருவள்ளூருக்கு சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றார்.கனகம்மாசத்திரம் அடுத்த கூளூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது முன்னாள் மின்கம்பம் ஏற்றி சென்ற டிராக்டர் திடீரென கிராமத்திற்குள் செல்ல திரும்பியது. இதை அறியாத கருணாகரன் நேராக வந்தார். அப்போது டிராக்டரில் நீண்டு இருந்த மின்கம்பத்தில் வாகனம் மோதியதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கனகம்மாசத்திரம் போலீசார் சடலத்தை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
22 hour(s) ago
22 hour(s) ago