உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்:பணி நிரந்தரம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருவள்ளூர் டோல்கேட் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு ஊழியருக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும். டாஸ்மாக் கடை இயங்கும் பணி நேரத்தில் இரவு நேரத்தில் 2 மணி நேரம் குறைக்க வேண்டும். கடைகளில் விற்பனையாகும் பணத்தை, கடைகளிலேயே நேரடியாக வந்து வசூல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட, 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாநில, மாவட்ட நிர்வாகிகள் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ