உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

கும்மிடி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையில் உள்ள குருத்தானமேடு கிராமத்தில், எம்.ஆர்.பி., என்ற பெயரில் வாகன உதிரிபாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. நேற்று மாலை தொழிற்சாலையின் பெயின்டிங் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டி தீயணைப்பு படையினர், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கவரைப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை