மேலும் செய்திகள்
வளர்ந்த புற்களால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
04-Aug-2025
பொன்னேரி:பரிக்குப்பட்டில், 40 அடி அகல ஓடை கால்வாய்க்கு, 4 அடியில் சிறுபாலம் அமைத்திருப்பதால், மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மீஞ்சூர் ஒன்றியம் கூடுவாஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பரிக்குப்பட்டு கிராமத்தில், ஓடைக்கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறுபாலம் குறுகலாக உள்ளது. இந்த பாலம், பரிக்குப்பட்டு - கூடுவாஞ்சேரி கிராமங்களுக்கு செல்லும் சாலையில் உள்ளது. கால்வாய் அகலம், 40 அடி இருக்கும் நிலையில், சிறுபாலம் 4 அடியில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால், மழைக்காலங்களில் மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: கனகவல்லிபுரம், பெரியகாவணம், பரிக்குப்பட்டு, உப்பளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக, இந்த ஓடைக்கால்வாய் பயணிக்கிறது. மழைக்காலங்களில் விவசாய நிலங்களில் தேங்கும் அதிகப்படியான தண்ணீர், இந்த கால்வாய் வழியாக வெளியேறி வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஆர்ப்பரித்து செல்லும் மழைநீர், இந்த குறுகிய பாலம் வழியாக செல்லும்போது சிக்கல் ஏற்படுகிறது. இதனால், பாலத்தின் மீது வெள்ளநீர் பயணித்து, பரிக்குப்பட்டு - கூடுவாஞ்சேரி கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. மேலும், விவசாய நிலங்களில் இருந்து மழைநீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த சிறுபாலத்திற்கு மாற்றாக, கால்வாய் அகலத்திற்கு உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
04-Aug-2025