உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நகராட்சியில் வாரத்தில் 7 நாட்களும் வசூல் மையம் வசூல் செயல்படும்

நகராட்சியில் வாரத்தில் 7 நாட்களும் வசூல் மையம் வசூல் செயல்படும்

திருத்தணி:திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 14,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம், வீடுகளுக்கு சொத்து வரியும், வணிக வளாகங்களுக்கு தொழில் வரியும், காலிமனைக்கு காலிமனை வரியும் வசூலிக்கிறது.ஆறு மாதங்களுக்கு, ஒரு முறை வரி வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்த மாதத்திற்குள் நடப்பாண்டிற்கான வரி வசூல் முழுமையாக முடிக்க வேண்டும்.ஆனால், பெரும்பாலானோர் வரி செலுத்தாமல் உள்ளனர். இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள், வருவாய் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வீடு, வீடாக சென்று, வரி வசூல் செய்து வருகின்றனர்.இது குறித்து, நகராட்சி கமிஷனர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:வரி இனங்கள் வசூலிப்பதற்காக, ஐந்து குழுக்களாக பிரித்து, 21 வார்டுகளும் வரி செலுத்தாதவர்கள் கண்டறிந்து வீடுகளுக்கு சென்று வசூலிக்கிறோம்.மேலும், இரண்டு நாட்களாக வரி செலுத்தும் உரிமையாளர்களின் மொபைல் போனுக்கு குறுந்தகவல் அனுப்பி, வரி செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.வரி செலுத்துபவர்கள் வசதிக்காக இம்மாதம் முதல், அடுத்த மாதம் வரை, வாரத்தில் ஏழு நாட்களும் வசூல் மையம் காலை முதல், மாலை வரை தொடர்ந்து செயல்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை