உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அழிந்து வரும் மரங்களை கண்டுகொள்ளாத நெ.சா.துறை

அழிந்து வரும் மரங்களை கண்டுகொள்ளாத நெ.சா.துறை

திருவாலங்காடு:குப்பை எரிப்பது, ஆணி அடித்து விளம்பர பலகை வைப்பது உள்ளிட்ட காரணங்களால், சாலையோர மரங்கள் காய்ந்து, பட்டு போவதை தடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். திருவள்ளூர் - அரக்கோணம், தக்கோலம் - கனகம்மாசத்திரம், திருவாலங்காடு - பேரம்பாக்கம் மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள் உள்ளிட்ட பல்வேறு சாலைகளில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகின்றன. இந்த மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் கண்டுகொள்ளாததால், மரங்களில்ஆணி அடித்து விளம்பர பலகைகள் வைப்பது, மரங்களின் கீழ் குப்பை கொட்டி எரிப்பது உள்ளிட்ட செயல்கள் அதிகரித்துள்ளன. இதனால், மரங்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி பட்டுபோகின்றன. சாலையோர மரங்களை பாதுகாக்கவும், புதிதாக மரக்கன்றுகள் நடவு செய்யவும் நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை