மேலும் செய்திகள்
திருவாசகம் முற்றோதல்
20-Jan-2025
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த, விடியங்காடு கிராமத்தில், விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில், பார்வதி உடனுறை பரமசிவன் அருள்பாலித்து வருகிறார்.விடியங்காடு பகுதிவாசிகள், பக்தி மார்க்கத்தில் திளைத்தவர்கள். அருகில் உள்ள வள்ளிமலையில் இருந்து முருகப்பெருமான் வள்ளியம்மமையாருடன் திருத்தணி வரும் வழியில், விடியங்காடு கிராமத்திலும் எழுந்தருளியதாக பக்தர்களின் நம்பிக்கை.இந்த கிராமத்தில் நேற்று, சிவனுக்கு திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், சென்னையைச் சேர்ந்த சிவனடியார்கள் பங்கேற்றனர். விடியங்காடு கிராமத்தைச் சேர்ந்த சிவபக்தர்களும் உடன் பங்கேற்றனர். முற்றோதல் நிகழ்ச்சியை தொடர்ந்து, சிவபூதகண வாத்தியங்களுடன் சிவனடியார்கள் வீதியுலா வந்தனர்.
20-Jan-2025