உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளி மாணவியை தாக்கியவர் கைது

பள்ளி மாணவியை தாக்கியவர் கைது

திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி, அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, முத்துக்கொண்டாபுரம் உயர்மட்ட பாலத்தின் மீது சென்ற போது, அதே கிராமத்தைச் சேர்ந்த விஜய், 25, என்பவர் தாக்கி காயப்படுத்தினார். இதுகுறித்து மாணவியின் தந்தை திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி வழக்குப் பதிந்த போலீசார், தலைமறைவாக இருந்த விஜயை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ