உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காமராஜர் சிலை அருகே ஆக்கிரமிப்பு அகற்றுவதில் நெ.சா.துறை தயக்கம்

காமராஜர் சிலை அருகே ஆக்கிரமிப்பு அகற்றுவதில் நெ.சா.துறை தயக்கம்

திருவள்ளூர்:சென்னை - திருத்தணி, திருப்பதியை இணைக்கும் நகராக திருவள்ளூர் திகழ்கிறது. திருப்பதி, திருத்தணியில் இருந்து சென்னைக்கு செல்ல, திருவள்ளூர் நகரின் சி.வி.நாயுடு சாலை, ஜே.என்.சாலை வழியாக, தினமும் 100க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பேருந்துகள் பயணிக்கின்றன.மேலும், திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னை கோயம்பேடு, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள், தெற்கு குளக்கரை தெரு வழியாக, ஜெ.என்.சாலையில் பயணிக்கின்றன.சி.வி.நாயுடு சாலை, தெற்கு குளக்கரை சாலை வழியாக வரும் வாகனங்கள், ஜே.என்.சாலையை இணைக்கும் பகுதியாக காமராஜர் சிலை சந்திப்பு திகழ்கிறது. இவ்விரண்டு சாலையும் சந்திக்கும் காமராஜர் சிலை அருகே ஆட்டோ, இருசக்கர வாகனம், கனரக வாகனங்கள் என, 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன.மூன்று சாலை சங்கமிக்கும் காமராஜர் சிலை அருகே, வாகனங்கள் திரும்பும் இடத்தில், சாலையை ஆக்கிரமித்து பெரிய பழக்கடை மறறும் பூ, காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கடைகளுக்கு வருவோர், தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதால், இச்சாலை சந்திப்பில் தினமும் நெரிசல் ஏற்படுகிறது.போக்குவரத்து போலீசாரும், நெடுஞ்சாலை துறையினரும் இந்த ஆக்கிரமிப்பை அகற்றாமல், கைகட்டி வேடிக்கை பார்த்து வருகின்றனர். இதனால், தினமும் காலை - மாலை வரை காமராஜர் சாலை சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எனவே, திருவள்ளூர் கலெக்டர், காமராஜர் சிலை அருகே மூன்று சாலை சந்திக்கும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை