உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் அமைச்சர் வராததால் திறப்பு விழா ரத்து

கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் அமைச்சர் வராததால் திறப்பு விழா ரத்து

திருவள்ளூர்:திருவள்ளூர் மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலக திறப்பு விழா, அமைச்சர் வராததால் ரத்தானது.திருவள்ளூர், திருத்தணி மற்றும் திருமழிசை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களை உள்ளடக்கி, கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் திருவள்ளூரில் அமைக்க கடந்த ஏப்ரல் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.இதையடுத்து, பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலம் அருகில், தனியார் கட்டடம் வாடகைக்கு எடுக்கப்பட்டு, அங்கு அலுவலகம் அமைக்கும் பணி நடந்து வந்தது.இப்பணி முடிவுற்ற நிலையில், கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தினை திறக்க மாவட்ட அமைச்சரான நாசரிடம் தேதி கேட்கப்பட்டது. கடந்த 13ம் தேதி அலுவலகத்தை திறக்க அமைச்சர் தேதி கொடுத்தார்.இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள், திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து, தயார் நிலையில் இருந்தனர். அமைச்சர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வருகைக்காக வரவேற்பு ஏற்பாடு தடபுடலாக செய்யப்பட்டது.இந்த நிலையில், பூண்டி நீர்த்தேக்கத்தினை துணை முதல்வர் உதயநிதி அன்றைய தினம் பார்வையிட்டார். இதன் காரணமாக, அமைச்சர் தரப்பில், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலக திறப்பு விழாவினை ஒத்தி வைக்குமாறு தெரிவித்து விட்டு, துணை முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்.இதனால், செயற்பொறியாளர் அலுவலகத்தை ஆர்வமாக எதிர்பார்த்த, திருவள்ளூர் மாவட்ட மின்வாரிய அலுவலர்கள் மற்றும் மின்நுகர்வோர் ஏமாற்றமடைந்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி